JPJ அதிகாரிக்கு RM 90,000 அபராதம்!
- Shan Siva
- 06 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 6: பகாங் மாநிலத்தில் பணியாற்றிய சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரி ஒருவருக்கு, ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் RM90,000 அபராதமும் விதித்து குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷரின் சஃபாமி
சைனுடின் எனும்
சம்பந்தப்பட்ட நபர்அதிக எடை கொண்ட லாரிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல்
இருப்பதற்கான தூண்டுதலாக, மூன்று
நபர்களிடமிருந்து மொத்தம் RM7,700 லஞ்சம் பெற்றதாகக்
கண்டறிந்து நீதிபதி சஸ்லினா சாஃபி அந்நபரைக்
குற்றவாளி என தீர்மானித்தார்.
இந்த தொகைகள், 2019 ஜூன் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை, மூன்றாம் நபரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக
நீதிமன்றம் தெரிவித்தது.
ஒவ்வொரு
குற்றச்சாட்டுக்கும் இரண்டு ஆண்டுகள்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட
நிலையில், அனைத்து
தண்டனைகளும் ஒரே நேரத்தில் (concurrently) அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஷரின் தனது செயல்களுக்கு
மனவருத்தம் தெரிவித்ததையும், நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டு வருவதால் வருமானம்
இழந்ததையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
அவர் JPJ அதிகாரியாக இருந்த வருமானத்தை
இழந்துள்ளார். இதுவும் அவருக்கு ஒரு தண்டனையாகவே அமைகிறது என நீதிபதி
கூறினார்.
RM90,000 அபராதத்தை
செலுத்தத் தவறினால், மேலும் 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



