MMEA அதிகாரி கொலை!

top-news

கோலாலம்பூர், அக் 27: பெர்லிஸ் கடற்பரப்பில் நடத்தப்பட்ட நடவடிக்கையின்போது மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் (MMEA) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் கங்கார், சுங்கை பாடாங் கடற்பகுதியில் எல்லைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த அதிகாரிக்கு 14 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மனைவியும் உள்ளனர்.

கங்காரில் உள்ள துவாங்கு ஃபௌசியா மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்ததும், அவரது உடல் இன்று கெடா மாநிலம், கோலா நெராங்கில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்