GISBH விவகாரத்தில் எந்த அரசாங்க அதிகாரியோ,தலைவரோ ஈடுபடவில்லை-சைபுதீன் நசுஷன் இஸ்மாயில்

top-news

பெட்டாலிங் ஜெயா:

GISBH  நிறுவனம் தொடர்பான விவகாரத்தில்  எந்த அரசாங்க அதிகாரியும் அல்லது அரசியல் தலைவரும் ஈடுபடவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

GISBH உடன் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல் தலைவர்களை தொடர்புபடுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் போலீஸ் விசாரணையில் இதுவரை கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் GISBH விவகாரம் தொடர்பாக அரச விசாரணைக் கமிஷன் (RCI) தேவையா என்றும், அதிகாரிகளின் நடவடிக்கையின்றி அந்நிறுவனம் உலகளவில் எவ்வாறு இயங்க முடிந்தது என்றும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சைஃபுடின் இதனை தெரிவித்தார்.

எந்த அரசு அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ இதில் ஈடுபட்டார்களா அல்லது GISBH உடன் கூட்டுச் சேர்ந்தார்களா என்றும் அவர் கேட்டார்.

இதற்குப் பதிலளிக்கையில் சைபுடின் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்