ஜொகூர் தேர்தல்: பாஸ் 11 இடங்களில் போட்டி

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், ஜூன் 26: ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தனது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அது நீக்கியுள்ளது.

பாஸ் கட்சியின் உதவித் தலைவரும், பெரிகாத்தான் நேஷனல் தலைவருமான அஹ்மத் சம்சூரி மொக்தார், நேற்று இரவு மூவாரில் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

வேட்பாளர்களில், கஹாங் தொகுதியில் போட்டியிடும் ஜொகூரின் முன்னாள் நிர்வாக கவுன்சிலர் மஸ்லான் புஜாங்கும் ஒருவர். மஸ்லான், கட்சியை விட்டு விலகி பாஸ் கட்சியில் இணைவதற்கு முன்பு, 2018 முதல் 2022 வரை புத்ரி வாங்சா தொகுதியின் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

மகாராணி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் தாலிபிற்குப் பதிலாக, அனுவார் ஹயானை பாஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

ஜொகூர் தேர்தல் ஜூலை 11 ஆம் தேதியும், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 27ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும் நடைபெறுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *