இந்துக்கள் பேய் பிடித்தது போல் ஆடுகிறார்களா?

top-news
FREE WEBSITE AD

தைப்பூச காவடி சடங்கை இழிவுபடுத்திய ஏரா எஃப் எம் வானொலி நிலயத்தைச் சேர்ந்த அறிவிலிகளுக்கு, ஒத்து ஊதும் வகையில் இஸ்லாமிய மத போதகர் சாம்ரி வினோத் facebook-கில் பதிவேற்றியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்வேறு புகார்களும், கண்டனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன..
தைப்பூசக் காவடியாட்டத்தை இழிவு -படுத்தியிருப்பதோடு, சுபாங் ஜெயா சீஃபீல்ட் ஆலயக் கலவரத்தில் தீயணைப்பு வீரர் Adib உயிரிழந்த சம்பவத்தையும் தேவையின்றி தொடர்படுத்தி பேசி பெரும் பதற்றத்தை உருவாக்க முனறு வருவதாகவும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சம்ரி தனது முகநூல் பதிவில் வெளியிட்ட கருத்துகள் இந்துக்களை அதிகம் பாதித்துள்ளதோடு, கண்டன கருத்துகள் பழிக்குப் பழி என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கின்றன.

‘வேல் வேல்’ என உச்சரித்து காணொளியில் ஆட்டம் போட்ட ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் விசாரணைக்கு ஆளாகியிருப்பது குறித்து கருத்துரைத்த சம்ரி வினோத், பேய் பிடித்தது போலவும் மது போதையில் இருப்பது போலவும், ‘வேல் வேல்’ எனக் கூறிக் கொண்டு ஆடும் போது இந்துக்களுக்கு அது இழிவாகத் தெரியவில்லையா எனக் கேள்வி எழுப்பி குளிர்காய்ந்திருக்கிறார்.

இந்துக்கள் செய்வதைப் பார்த்து தான் மற்றவர்களும் வெறுமனே பின்பற்றுகிறார்கள்; ஆனால் மற்றவர் செய்யும் போது மட்டும் அது அவர்களுக்கு இழிவாகப் படுகிறது; மற்றவர் இழிவுப்படுத்தக் கூடாது என்றால், அவ்வாறு செய்வதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள். இல்லையென்றால் ஏளனம் செய்கிறார்களே என கூப்பாடு போடாதீர்கள்” என சம்ரி அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.விரைந்து நடவடிக்கை எடுத்து இது போன்ற விஷச் செடிகளைப் பிடுங்கி எறிய வேண்டும் என்கின்றனர் பல்வேறு தரப்பினர்.

ERA FM penyampai radio dikritik kerana didakwa menghina upacara Thaipusam Kavadi, mencetuskan kontroversi besar. Pendakwah Islam, Samri Vinoth, turut memuat naik komen kontroversi di Facebook, mengundang kemarahan masyarakat Hindu. Pelbagai pihak mendesak tindakan segera terhadap kenyataan yang mencetuskan ketegangan agama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *