அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை! -அம்னோ உறுதி
- Shan Siva
- 13 Nov, 2026
கோலாலம்பூர், நவ 13: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் பாரிசான் நேஷனல் ஈடுபடாது என்று அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ரஃப் வஜ்டி துசுகி மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை நிபந்தனைகளும் அரசியல் உடன்பாடுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதே சரியான வழி என்றும் அவர் தெரிவித்தார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

