தண்டவாளத்தின் குறுக்கே குதித்துப் படம்பிடித்த நபரை போலீஸ் தேடுகிறது!

top-news

கோலாலம்பூர், செப் 27: இரண்டு நாட்களுக்கு முன்பு புக்கிட் பிந்தாங் மோனோரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் குறுக்கே குதிப்பதைப் போல் படம்பிடித்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செவ்வாயன்று சீன சமூக ஊடகமான சியாஹோங்ஷுவில் இந்தச் செயலின் நான்கு வினாடி வீடியோ பதிவேற்றப்பட்டதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.

நேற்று இரவு 9.34 மணிக்கு இந்த சம்பவம் குறித்த அறிக்கையை பிரசரணாவின் துணை போலீசார் பதிவு செய்தனர்.  சந்தேக நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேக நபரைக் கண்டறிவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை என அவர் நேற்று இரவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 447வது பிரிவின் கீழ் குற்றவியல் அத்துமீறலுக்கான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

தகவல் தெரிந்தவர்கள் Dang Wangi போலீஸ் தலைமையகத்தை  அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்