ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீஸ் தேடுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 19: மூவார், பக்கிரியில் உள்ள தாமன் ஸ்ரீ ட்ரேவில் நேற்று ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட  இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டவரின் பெரோடுவா மைவியுடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி பதிவில், மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து மதிப்புமிக்க பொருட்களை திருடுவது பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் வீடு திரும்புவதை அவதானித்த சந்தேக நபர்கள் சுவரின் பின்னால் ஒளிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வீட்டுக்கு வெளியே ஏற்பட்ட கைகலப்பின் போது சந்தேகநபர்களால் தாக்கப்பட்டதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 395/397 பிரிவின் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக மூவார் காவல்துறைத் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.

இந்நிலையில், இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *