டோல் சாவடியில் போக்குவரத்து கோனை வீசி சர்ச்சை செய்தவரை போலிஸ் தேடுகிறது!
- Shan Siva
- 09 Feb, 2026
சுபாங் ஜெயா, பிப் 9: பூச்சோங் விரைவு நெடுஞ்சாலை (LDP) சுங்கச்சாவடியில்
போக்குவரத்து கோனை வீசி, அவதூறான வார்த்தைகளை கத்திக் கூறியதாக
குற்றம் சாட்டப்பட்ட சிவப்பு நிற பேரோடுவா ஆக்சியா காரின் ஓட்டுநரை போலீசார் தேடி
வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று சமூக ஊடகங்களில்
வைரலாகியுள்ள நிலையில், பெட்டாலிங் ஜெயா சுங்கச்சாவடியில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த சமயத்தில் இது நடந்ததாக கூறப்படுகிறது.
இது
தொடர்பாக பதிவை ஒரு போலீஸ் அதிகாரி
கண்டறிந்ததையடுத்து, இன்றூ
அதிகாலை 1.37 மணியளவில்
காவல் புகார் பதிவு செய்யப்பட்டது
என்றூ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான்
அஸ்லான் வான் மமாட் கூறினார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக
நபர் தனது வாகனத்தை திடீரென நிறுத்திய பின்னர், மற்றொரு
வாகனத்தை நோக்கிப் போக்குவரத்து கோனை வீசியதாக தெரிய வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ பொதுமக்களிடையே பெரும்
கவனம் பெற்றிருந்தாலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தின்
உரிமையாளர் இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை என்றும் வான்
அஸ்லான் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, தண்டனைச் சட்டம் பிரிவு 427 (சொத்து
சேதம்), சிறிய குற்றங்கள் சட்டம் பிரிவு 14,
மற்றும் 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 48(1)
ஆகியவற்றின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் முன்வர வேண்டும்
என்றும், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண
போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



