வேப் கடத்தல் கும்பலை காவல்துறை முடக்கியது! RM 12.7 மில்லியன் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 6: சிலாங்கூரில் சட்டவிரோத வேப் மற்றும் கடத்தல் சிகரெட் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு முக்கிய கும்பல்களை காவல்துறை முடக்கியுள்ளதுடன், 12.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது.

 'ஓப்ஸ் டாரிங் ஆல்பா 3' மற்றும் 'ஓப்ஸ் டாரிங் ஆல்பா 1' என்ற குறியீட்டுப் பெயர்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்தார்.

 இந்நிலையில் சோதனைக்குள்ளான அனைத்து சந்தேக நபர்களும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் அமலாக்கத்திற்காக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மற்றும் கோம்பாக் சுகாதார அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *