நாயை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றவர்கள் மீது போலீஸ் புகார்!
- Shan Siva
- 24 Sep, 2026
ஜார்ஜ் டவுன், செப் 24: ஜெலுத்தோங், பத்து லஞ்சாங் (Batu
Lancang) பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் கருப்பு
நிற நாய் ஒன்றை இழுத்துச் சென்ற இருவரை பினாங்கு கால்நடைச் சேவைகள் துறை (DVS)
அடையாளம் கண்டுள்ளது.
சாலையில் சென்ற
ஒருவர் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம்
வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், டேவிட் யிம் (David Yim) என்ற தனிப்பட்ட விலங்கு மீட்பாளர் இது குறித்து
அதிகாரப்பூர்வமாகத் துறைக்கு புகார் அளித்தார்.
புகார்
அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட
நபர்களைக் கண்டறிந்து அந்த விலங்கை மீட்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக
பினாங்கு DVS இயக்குனர்
டாக்டர் சாய்ரா பானு முகமது ரெஜாப் தெரிவித்தார்.
அந்த நாய்
முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் கால்நடை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
விலங்குகள் நலச்
சட்டம் 2015-இன் (சட்டம் 772) பிரிவு 29(1)-இன் கீழ் இந்த விவகாரம் குறித்து
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்
கூறினார்.
விலங்குகளுக்கு
இழைக்கப்படும் கொடுமை, துன்புறுத்தல்
அல்லது கடுமையான புறக்கணிப்பு ஆகியவற்றை இச்சட்டம் குற்றமாகக் கருதுகிறது; இதற்கு RM20,000 முதல் RM100,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



