பழைய கிள்ளான் சாலையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்திய நபர்! - காவல்துறை தேடுதல் வேட்டை

top-news

கிள்ளான், ஏப் 5: இன்று காலை பழைய கிள்ளான் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் போக்குவரத்து விதிகளுக்கு எதிராகச் சென்ற காரின் ஓட்டுநரை கோலாலம்பூர் காவல்துறை தேடி வருகிறது.

இந்தச் சம்பவம் காலை 9.44 மணிக்கு நடந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா கூறினார்.

அந்த கார், ஜாலான் கிள்ளான் லாமா/ஜாலான் செபாடு சந்திப்பிலிருந்து ஜாலான் கிள்ளான்  லாமா/ஜாலான் கூச்சாய் லாமா சந்திப்பு வரை பயணித்தது காணப்பட்டது.

இதுவரை எந்தக் காவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சம்சுரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபரைத் தேடிப்பிடிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளதாக  அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்