இன உணர்வுகளைத் தூண்டியதாக ஹாடி மீது காவல்துறை விசாரணை!

top-news

கோலாலம்பூர், நவ 16: மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

தேசிய காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய அரசியல் குறித்துப் பேசிய ஹாடி அவாங், முஸ்லிம் அல்லாதவர்களை ஒடுக்குமுறையாளர்கள் எனக் குறிப்பிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாகக் காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தின் 505 மற்றும் 298ஆவது பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும், மலாக்கா தேர்தல் தொடர்பாகக் கிடைத்த 42 புகார்களின் அடிப்படையில் 32 விசாரணைக் கோப்புகள் தயாரிக்கப்பட்டு சட்டத்துறை தலைமை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்