KL காவல்துறை தீபாவளி!

top-news

(இரா.கோபி)

கோலாலம்பூர், நவம்பர் 21: கோலாலம்பூர்‌ காவல்துறையினரின்‌ தீபாவளி  விருந்துபசரிப்பு   கோலாலம்பூர்‌ போலீஸ்‌ தலைமையகத்தில்‌ வெகு சிறப்பாக நடைபெற்றது.                                                                               

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர்‌ டத்தோ அஸ்ரி அக்மோர்‌ அயூப்‌ கலந்து கொண்டார்‌.                          

காவல்துறையினரிடம்‌ ஒற்றுமை மிகவும்‌ முக்கியம் என டத்தோ அஸ்ரி வலியுறுத்தினார்.ஒவ்வோர்‌ ஆண்டும்‌ பல பண்டிகைகள்‌ வருகின்றன. அந்த பண்டிகைகள்‌ அனைத்தையும்‌ காவல்துறையினர்‌ ஒற்றுமையாகவும்‌ சிறப்பாகவும்‌ கொண்டாடி வருகின்றனர்‌.  அதேபோல்‌ இந்த தீபாவளிவிருந்து நிகழ்ச்சியிலும்‌ மூவின மக்களும்‌ கலந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது என்று கூறியதோடு, இந்திய காவல்துறை அதிகாரிகள்‌ அனைவருக்கும்‌ தீபாவளி வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொண்டார்‌. 

இந்நிகழ்ச்சியில்‌ ஸ்தாப்பாக்‌ மேரி ஆதரவற்றோர்‌ இல்லத்திலிருந்து 30 மாணவர்கள்‌ வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுக்‌ கூடைகளையும்,‌ அன்பளிப்பையும்‌ டத்தோ அஸ்ரி வழங்கினார்‌

இந்நிகழ்வில் எஸ்‌.ஏ.சி.ரவீந்தர்‌ சிங்‌, எஸ்‌.ஏ.சி.ஞானசேகரன்‌, ஏசிபி சோமு உட்பட உயர்‌ அதிகாரிகளும்‌ கலந்து கொண்டனர்‌. அவர்களுக்கு ஏ.எஸ்‌.பி.மோகன்‌ நன்றி தெரிவித்துக்‌கொண்டார்

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்