KL நில அமிழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஓம்ஸ் அறவாரியத்துடன் இணைந்து உதவுபவர்கள் உதவலாம்!

top-news

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வுச் சம்பவத்தில் மாயமான, இந்தியாவைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்ற மாதுவின் மரணம், பெரும் துயரமாகிவிட்ட நிலையில். அன்னாரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்தும் விதமாகப் பலரும் பல வகையில் உதவிகள் புரிந்துள்ளனர்.

அவ்வகையில் 'தமிழ் மலர்' சார்பில் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து, வரும் அக்டோபர் 25ஆம் தேதி, தலைநகர், ஜாலான் ஈப்போவில் உள்ள 'தமிழ் மலர்' அலுவலகத்தில் (பகல் 12 மணி முதல் 3 மணிக்குள்) விஜயலெட்சுமியின் மகனிடம் ஓம்ஸ் பா.தியாகராஜன் நிதி உதவியை வழங்கவிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினருக்கு உதவ நினைப்பவர்கள் 'தமிழ் மலர்' அலுவலகத்திற்கு அக்டோபர் 25ஆம் தேதி வந்து உதவிகளை வழங்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

தொடர்புக்கு : 019 9389 5878/ 013-532 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்