PharmD சிக்கலைத் தீர்த்துவையுங்கள்! - அன்வார் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: அலெக்ஸாந்திரியா பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மருந்தியல் முனைவர் (PharmD) தகுதிக்கான அங்கீகாரம் தொடர்பான சிக்கலை விரைவாகத் தீர்க்குமாறு உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் (PMO) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பதிவு மற்றும் தொழில்முறை பயிற்சி நோக்கங்களுக்காக PharmD தகுதியை அங்கீகரிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மருந்தியல் மாணவர்கள் எழுப்பிய புகார்களை அது குறிப்பிட்டுள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தின் கல்விசார் அங்கீகாரத்திற்கு மலேசியத் தகுதி முகமைக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், ஒரு மருந்தாளராகப் பதிவு செய்வதற்கான தொழில்முறை அங்கீகாரத்திற்கு, மலேசிய மருந்தியல் வாரியத்தின் பரிசீலனையும் ஒப்புதலும் தேவைப்படுகிறது.

எனவே, மருந்தியல் தொழிலுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொழில்முறைத் தரங்களில் சமரசம் செய்துகொள்ளாமல், மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு முடிவிலும் நீதி, கருணை மற்றும் ஞானத்தைக் கோரும் மdaaனி கட்டமைப்பிற்கு இணங்க, உயர்கல்வி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

தாங்கள் படித்துக்கொண்டிருந்த திட்டம் மலேசிய மருந்தியல் வாரியத்தால் அங்கீகரிக்கப்படாததால், கடந்த ஆண்டு நான்காம் ஆண்டில், இந்தத் திட்டத்தில் சேர்ந்திருந்த நான்கு மாணவர்களால் poision law எனப்படும் விஷச் சட்டத் தேர்வை எழுத முடியவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *