7 வயது சிறுவனை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் மீது வழக்கு பதிவு!
- Shan Siva
- 09 Jan, 2026
ஜொகூர் பாரு, ஜன 9: பாசிர் கூடாங் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஏழு வயது சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 55 வயதுடைய பெண் ஒருவர் இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சானியா ஒஸ்மான் என்ற சம்பந்தப்பட்ட நபர் மீது வாசிக்கப்பட்ட
குற்றச்சாட்டை, மஜிஸ்திரேட் நபிலா நிசாம் முன்னிலையில்
அவர் தலையசைத்து உறுதிப்படுத்தினார்.
இது கொலை வழக்கு என்பதால், உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வரும் வழக்கு எனக்
கூறி, அவரிடமிருந்து குற்றம் ஒப்புக்கொள்ளும்
வாக்குமூலம் பெறப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மாலை 7.30 மணி
முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணி வரை, பாசிர்
குடாங், தாமான் கோத்தா மாசாய் பகுதியில் உள்ள
ஒரு வீட்டின் ஹாலில், அஸ்வாட் ஃபைரூஸ் என்ற சிறுவனை கொலை
செய்ததாக சானியா ஒஸ்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 302ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு,
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறை தண்டனை, மேலும் குறைந்தபட்சமாக 12 பிரம்படி
தண்டனை விதிக்கப்படும்.
நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு
ஜாமீன் வழங்க மறுத்ததுடன், பிரேத பரிசோதனை, இரசாயன
மற்றும் டிஎன்ஏ அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக மார்ச் 9ஆம்
தேதியை அடுத்த விசாரணை நாளாக நிர்ணயித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



