சபாவில் 23 வது மாடியிலிருந்து விழுந்து பெண் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோத்த கினபாலு, ஜன 8: சபா சண்டகானில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிட வளாகத்தின் 23வது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார்.

47 வயதான அந்த உள்ளூர் பெண் கீழே விழுவதற்கு முன்பு, லிஃப்டில் இருந்து வெளியே செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக சண்டகான் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ஃபுவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் ஜாலான் Jalan Buli Sim Sim மில் உள்ள போர்னியோ கோவ் ரெசிடென்ஸ், பிளாக் ஏவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர், அப்பகுதியில் வசிக்காதவர் என்றும், யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அப்பெண்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கென்ட் டச்சஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக றப்துல் ஃபுவாட் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *