ஜொகூர் ஆற்றில் கை – கால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!
- Shan Siva
- 20 Jul, 2026
கோத்தா திங்கி, ஜூலை 20: பெங்கராங், உலு பாப்பான், சுங்கை தஞ்சோங் செரிண்டிட் பகுதியில், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம், கைகளும் கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் நேற்று மிதந்தபடி கண்டெடுக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு அப்பகுதி மக்கள் சடலம்
கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து, இது தொடர்பாக
விசாரணை தொடங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்
ஒரு வெளிநாட்டவர் என்று நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது கைகளும் கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும்
முதற்கட்ட சோதனையில் தெரியவந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோஃப் ஓத்மான்
தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின்
அடையாளம் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை
தொடர்கிறது என்று அவர் இன்று
ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



