மலேசிய விமானப்படைக்கு போர் விமானங்கள் வருகை!

top-news

லாபுவான், அக் 30: மலேசியாவின் வான்வழிப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, விமானப்படைக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட முதல் இரண்டு எஃப்.ஏ-50எம் இலகுரக போர் விமானங்களைத் தற்காப்பு அமைச்சர் காலித் நோர்டின் இன்று பெற்றுக்கொண்டார்.

தென் கொரியாவின் கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு விமானங்களும், அந்நாட்டின் சச்சியோன் நகரிலிருந்து மலேசியாவின் லாபுவான் விமானப்படைத் தளத்திற்கு வந்தடைந்தன.

இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு நிகழ்ச்சி நவம்பர் மாதத்தின் மத்தியில் குவாந்தான் விமானப்படைத் தளத்தில் நடைபெறும் என காலித் நோர்டின் தெரிவித்தார்.

இந்தக் கொள்முதல் நாட்டின் ராணுவ வலிமையை மேம்படுத்துவதுடன், தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என்றார்.

மேலும், எதிர்காலத்தில் இன்னும் நவீனமான போர் விமானங்களின் இரண்டாவது தொகுதியைக் கொள்முதல் செய்வது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அவை எந்த நாட்டிலிருந்து வாங்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்