சம்சூரியின் ஒப்புதல் இன்றி PN கூட்டமோ, நிகழ்ச்சியோ நடத்த முடியாது! - PN பொதுச் செயலாளர் அறிவிப்பு
- Shan Siva
- 20 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 20: பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரின் ஒப்புதல் இல்லாமல் கூட்டணியின் பெயரில் எந்த நிகழ்ச்சியோ கூட்டமோ ஏற்பாடு செய்ய முடியாது என்று அதன்பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் தலைமை மாற்றத்தை சங்கங்களின் பதிவாளர் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
சங்கங்களின் பதிவிலாகா, ஜூன் 19 தேதியிட்ட மற்றும் தனக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற கூட்டணியின் சிறப்பு உச்ச மன்றக் கூட்டத்தின் குறிப்புகள் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியதாக தக்கியுதீன் கூறினார்.
மேலும், பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து முகைதீன் ராஜினாமா செய்ததற்கும், அப்பதவிக்கு சம்சூரி நியமிக்கப்பட்டதற்கும் உச்ச மன்றம் ஒப்புதல் அளித்ததையும் சங்கங்களின் பதிவிலாகா கவனத்தில் எடுத்துக்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சம்சூரியின் அனுமதியின்றி பெரிகாத்தான் நேஷனல் பதாகையின் கீழ் எந்தவொரு நிகழ்ச்சியோ அல்லது கூட்டமோ நடத்தப்பட முடியாது என்று தக்கியுதீன் ஒரு அறிக்கையில் கூறினார்.
பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், பெர்சாத்து தலைமையகத்தில் பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தைக் கூட்ட முகைதீன் முயன்றதாக வந்த செய்திகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



