தண்டவாளத்தில் விழுந்த பயணியால் வங்சா மாஜு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 22: இன்று காலை வாங்சா மஜு LRT ரயில் நிலையத்தில், ஒரு பயணி மயங்கி தண்டவாளத்தில் விழுந்ததால், கெலானா ஜெயா இலகுரக ரயில் பாதையில் சேவைகளில் சிறிது நேர இடையூறு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த காலை 6.52 மணிக்கு, ரேப்பிட கே.எல் நிறுவனத்தின் நடைமேடை ஊடுருவல் அவசரகால நிறுத்த அமைப்பு உடனடியாகச் செயல்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தண்டவாளங்களுக்கான மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

நிலையப் பணியாளர்களால் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பயணி, முதற்கட்ட சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 நிலையங்களிலோ அல்லது நடைமேடைகளிலோ உடல்நிலை சரியில்லாமல் உணரும் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள், துணைப் போலீஸ் அதிகாரிகள் அல்லது நிலையப் பணியாளர்களின் உதவியை நாடும்படி ரேப்பிட் கே.எல் அறிவுறுத்தியது.

மேலும், ரயில்களுக்காகக் காத்திருக்கும்போது மஞ்சள் கோட்டிற்குப் பின்னால் இருக்குமாறு பயணிகளுக்கு அது நினைவூட்டியது.!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *