இனி மின்விளக்குகள் தேவையில்லை! இந்தச் செடிகளை வளர்த்தாலே போதும்! மின்மினி பூச்சிகளின் மரபணு கொண்டு சீனா உருவாக்கியிருக்கும் ஒளிரும் செடிகள்!
- Shan Siva
- 16 Jun, 2026
தெருவிளக்குகள் வீதிகளில் வெளிச்சம் காட்டினாலே உற்சாகம்தான். ஆனால், ஒரு வேளை வீதியில் விளக்குகள் இல்லை என்றால்? அல்லது மின்சாரச் சிக்கலில் பவர் கட் ஆகி பைத்தியம் பிடிக்க வைத்தால்? என்னவாகும் நிலைமை?
இதை யோசித்த சீனா, வித்தியாசமாய்
ஓர் ஆராய்ச்சி செய்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீதிகளில் மின்
விளக்குகள் தேவையில்லை.. இனி இருபுறமும் வளர்ந்து நிற்கும் செடிகளே விளக்குகளாய்
நமக்கு வெளிச்சம் கொடுக்கும்.
உயிரியல் தொழில்
நுட்பத்தில் மரபணு மாயம் செய்து இந்த விந்தையை நிகழ்த்தியிருக்கிறது சீனா.
சீனாவின் உயிரியல்
தொழில்நுட்ப நிறுவனமான Magicpen
Bio-வைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மின்சாரம்
இல்லாமலேயே இரவில் ஒளிரும் மலர்கள் மற்றும் தாவரங்களை உருவாக்கியுள்ளனர்.
மின்மினிப்
பூச்சிகள் (Fireflies) மற்றும்
ஒளிரும் காளான்கள் (Bioluminescent Fungi) ஆகியவற்றின் மரபணுக்களைப் பயன்படுத்தி, ஆர்க்கிட், சூரியகாந்தி மற்றும் செவ்வந்தி உள்ளிட்ட
20-க்கும் மேற்பட்ட தாவர
இனங்கள் இருளில் இயற்கையாக ஒளி வீசுமாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கம்
கண்டுள்ளன.
இந்தக்
கண்டுபிடிப்புக்குப் பின்னால் உள்ளவர் Li Renhan எனும் இயற்கை ஆர்வலர்.
சிறுவயதில்
கிராமப்புறத்தில் வளர்ந்த இவர், இரவு
நேரங்களில் தாத்தாவின் மூங்கில் தோட்டத்தில் படுத்துக்கொண்டிருக்கும்போது, தனது கைகளில் அமர்ந்த மின்மினிப்
பூச்சிகளைப் பார்த்து வியந்துள்ளார். பின்னர் மரபணு அறிவியலைப் படித்தபோது,
மின்மினிப் பூச்சியின் ஒளிரும் தன்மையை
சூரியகாந்தி மலருக்குள் கொண்டு வர முடியுமா? என்ற கேள்வி அவருக்கு தோன்றியது.
அதன்
விளைவாக இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.
தாவரம் எப்படி
ஒளிர்கிறது!
ஒளிரும்
உயிரினங்களில், குறிப்பிட்ட
ஒரு என்சைம் (enzyme) மற்றும்
ஒளி உண்டாக்கும் மூலக்கூறு (light-emitting molecule) இணைந்து செயல்படும் போது ஒளி
உருவாகிறது.
இந்த
ஒளி உற்பத்திக்குப் பொறுப்பான மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் தனிமைப்படுத்தி,
சாதாரண தாவரங்களின் டி.என்.ஏ.-வில்
சேர்த்தனர்.
இதன்
விளைவாக உருவானது இந்த ஆச்சரியத் தாவரங்க்கள்.
- தாவரமே தானாக ஒளி உண்டாக்குகிறது.
- மின்சாரம் தேவையில்லை.
- சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
- தண்ணீர் மற்றும் உரம் மட்டும் போதுமானது.
அதோடு அழகழகாய் இனி வீதிகள், வீடுகள் என எல்லாப்
பக்கங்களிலும் பூத்து ஒளிரும் இந்தச் செடிகள்.
இதன் மூலம்
- மின்சாரச் செலவு குறையும்.
- கார்பன் வெளியேற்றம் குறையும்.
- இயற்கை சூழலுடன் இணைந்த நகரங்கள் உருவாகும் என்கின்றனர்
நிபுணர்கள்.
இந்த தொழில்நுட்பம்
வியப்பூட்டினாலும், சில
சுற்றுச்சூழல் கவலைகளும் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
- இரவில் செயல்படும் பூச்சிகள் இதனால் குழப்பமடைவார்களா?
- மரபணு மாற்றப்பட்ட விதைகள் காட்டுத் தாவரங்களுடன் கலந்துவிடுமா?
- இயற்கை உயிரியல் சமநிலை பாதிக்கப்படுமா? போன்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எனவே,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் தாக்கங்கள் குறித்து கவனமாக ஆய்வு
செய்வதும் அவசியமாகும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



