சட்டத்துறை தலைவருக்கு எதிராக புகார்! - நஜிப் வீட்டுக்காவல் தாமதம் தொடர்பாக அம்னோ - பாஸ் போர்க்கொடி

top-news

கோலாலம்பூர், நவ 7: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் விவகாரத்தில்,  சட்டத்துறை தலைமை அலுவலகத்துக்கு எதிராக நாடு முழுவதும் போலீஸ் புகார் அளிக்க அம்னோ, பாஸ் இளைஞர் அணிகள் முடிவு செய்துள்ளன.

நஜிப்பின் வீட்டுக்காவல் உத்தரவைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என சட்டத்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், அதன் தலைமை அதிகாரி டத்தோஸ்ரீ டுசுக்கி மொக்தார் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்னோ இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அக்மல் சாலே கூறினார்.

இதுதொடர்பாக பாஸ் இளைஞர் அணித் தலைவருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும், இரு கட்சிகளின் உறுப்பினர்களும் நாடு முழுவதும் போலீஸ் புகார் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நஜிப்புக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பு உத்தரவு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான சட்ட விளக்கத்தைப் பெறுவதற்கு இவ்வளவு காலம் ஏன் தேவைப்படுகிறது என்றும் அக்மல் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதம் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதால், அரச மன்னிப்பு உத்தரவின்படி வீட்டுக்காவலில் எஞ்சிய தண்டனையை அனுபவிக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, நஜிப்பின் அபராதத் தொகையை நன்கொடை திரட்டி செலுத்தியதாக அம்னோ அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அபராதம் செலுத்தப்பட்டதைப் பதிவு செய்து விடுவிப்பு உத்தரவைப் பிறப்பித்தது.

ஆனால், அரச மன்னிப்பு உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவு தொடர்பான சட்ட விவகாரங்களை ஆராயும் வரை வீட்டுக்காவல் நடவடிக்கையைத் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என சட்டத்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்