வனுவாட்டு: படகு கவிழ்ந்து விபத்து – 30 பேர் மாயம்
- Surendran Sumdraraj
- 15 Sep, 2026
போர்ட் விலா, செப். 15 –
பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டில் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் மாயமாகியுள்ளனர். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வனுவாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அம்பெ தீவில் இருந்து சாண்டோ தீவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் மொத்தம் 45 பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் கடலில் தத்தளித்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், மேலும் 30 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மீட்பு நடவடிக்கைகளுக்கு சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



