மானியம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச். 1-

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானிய ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக, ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்கும் அரசாங்கத்தின் முடிவு "தேவையற்றது என்று, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

அரசாங்கம் உண்மையிலேயே நேர்மையான ஒன்றாக இருந்தால், மக்களுக்கு உதவுவதற்கான மானியமாக இருப்பதால், இரண்டு தரப்பினருக்கும் இடையில் பேச்சுக்களை நடத்துவதைக் காட்டிலும், மானியத்தை வழங்க வேண்டும் என்று, முன்னாள் பிரதமருமான முஹிடின் கேட்டுக் கொண்டார்.

"நேர்மை இருக்கின்றதா இல்லையா என்பதுதான் (எங்களின்) கேள்வியாகும். மானியம் கொடுக்க அவர்கள் விரும்பவில்லையென்றால், நல்லது, அதை
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த மானியத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றோம்.

"கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்டிருக்காத காரணத்தினால், அது குறித்து மற்றொரு கூட்டம் நடத்தப்பட வேண்டுமா? அது மிகச் சிறிய தொகைதான். எங்களுக்கும் கண்ணியம் இருக்கிறது என்ற காரணத்தினால் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

“நாங்கள் முடிவு செய்து விட்டோம். அதனால், இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கையை மேற்கொள்வது அரசாங்கத்தைப் பொறுத்தது என்று, கோலாலம்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பூமிபுத்ரா பொருளாதாரத்தின் எதிர்காலம் மீதான ஒரு கலந்துரையாடலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெர்சத்து கட்சித் தலைவருமான முஹிடின் தெரிவித்தார்.

Muhyiddin Yassin menyifatkan keputusan kerajaan menubuhkan jawatankuasa rundingan mengenai peruntukan Ahli Parlimen pembangkang sebagai tidak perlu. Beliau menegaskan bahawa kerajaan sepatutnya terus menyalurkan peruntukan tanpa rundingan tambahan kerana pembangkang telah memperjuangkannya selama lebih dua tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *