அனைவருக்கும் வாழ்த்துகள்! - அன்வார்
- Shan Siva
- 28 Jun, 2026
ஜொகூர் பாரு, ஜூன் 27: 16வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்களுக்கும், அவர்களின் தேர்தல் பிரச்சாரம் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.
வேட்பாளர்கள் வெறும் வாக்குகள் பெறுவதற்காக மட்டும் மக்களுடன் ஈடுபடாமல், அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை முழு மனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கடினமாக உழைப்பதன் முக்கியத்துவத்தையும், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதன் முக்கியத்துவத்தையும், வெறுப்பு அரசியலை விட குடிமை அரசியல் எப்போதும் மேலோங்கும் என்பதை நிரூபிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஜொகூர் மக்களின் நலனுக்காக நாம் உண்மையாகப் பாடுபட்டால், அவர்கள் தங்களின் அன்புக்குரிய மாநிலத்தின் எதிர்காலத்திற்காக சரியான முடிவை எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.
16வது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



