புவாட் சர்காஷிக்கு நல் வாழ்த்துகள்! - ஜாஹிட்
- Shan Siva
- 27 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 27: அம்னோவின் உச்ச மன்ற
உறுப்பினராக விளங்கிய புவாட் சர்காஷியின் ராஜினாமாவை அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி புறந்தள்ளியுள்ளார். கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்களின் முடிவை கட்சி
மதிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஜொகூர் பாரிசான் நேஷனல் தலைமைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நீண்டகால மற்றும் புதிய
தலைவர்களின் விசுவாசத்தை அம்னோ பெரிதும் மதிக்கிறது என்று ஜாஹிட் கூறியதாக
உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள தித்திவாங்சா மைதானத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச
திறந்தநிலை கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு, "ஜூலை 11 அன்று நடைபெறும் ஜோகூர்
மாநிலத் தேர்தலில் 56 பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கும் ஆதரவளிப்பதே
முக்கியமானது" என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அம்னோவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை நாங்கள் பாராட்டுகிறோம்.
புவாட் சர்காஷிக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



