அன்வாரின் பிதற்றல் ஆரம்பம்! ONN HAFIZ சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 17,

பிரதமர் அன்வாரின் பேச்சு வெறும் பிதற்றல் என ஜொகூர் மாநில முன்னாள் மெந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi சாடினார். ஜொகூரில் அறிவுள்ள, ஆணவமற்ற மெந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அன்வார் கூறியிருப்பது, அவருக்கு இன்னும் ஜொகூர் மக்களைப் பற்றி புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மாநிலச் சுய ஆட்சியை உணர்ந்தவர்கள் ஜொகூர் மக்கள் என Datuk Onn Hafiz Ghazi அன்வாருக்குப் பதிலளித்துள்ளார். 

மாநில மெந்திரி பெசாராக இருந்த போது நான் கட்சி பேதமின்றி நடுநிலையாக நடந்து கொண்டேன். மாநில அரசாங்கத்தைக் கலைத்த பின்னரே பாரிசான் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்றும், பக்காத்தானுடன் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்தேன். நான் பாரிசான்காரன்! எனக்கு என்னுடைய கட்சி முக்கியம். கூட்டணிக்கான அவசியம் இல்லாத போது மற்ற கட்சிகளுடன் பாரிசான் கூட்டணி அமைக்க வேண்டியது இல்லை. என் கட்சிக்கு நான் நியாயமாக இருக்கிறேன்.  இது அன்வாருக்கு ஆணவமாகத் தெரிந்தால் அவருடைய பார்வையில் கோளாறு இருக்கிறது. நான் அறிவான அரசியல் தலைவர் என்பதை ஜொகூரின் அறிவார்ந்த மக்கள் உணர்ந்துள்ளனர் என ஜொகூர் மாநில மெந்திரி பெசார் வேட்பாளரான Datuk Onn Hafiz Ghazi காட்டமாக அன்வாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *