‘வந்தே மாதரம்’ பாடலில் 2 சரணம் மட்டுமே பாட வேண்டும் – கர்நாடக அரசு உத்தரவு

top-news
FREE WEBSITE AD

பெங்களூரு, செப். 11 –

கர்நாடகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும் என்று காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மற்ற அரசு நிகழ்ச்சிகளில் முதல் இரண்டு சரணங்கள் மட்டும் பாடப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடுவது தொடர்பாக தேசிய அளவில் அரசியல் விவாதம் எழுந்தது. காங்கிரஸ் தனது கட்சி நிகழ்ச்சிகளில் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் முழுமையாக பாடப்படாமல் நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்திருந்தது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் புதிய உத்தரவு அரசியல் வட்டாரங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *