அலட்சியம் வேண்டாம்! - அன்வார் எச்சரிக்கை
- Shan Siva
- 19 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 19: பிகேஆர் தலைவர்கள் அலட்சியமாக இருக்கவோ அல்லது அற்பமான தகராறுகளில் நேரத்தை வீணடிக்கவோ கூடாது என்றும், மாறாக பொதுமக்களுக்கான தங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்வார் நினைவூட்டியுள்ளார்.
நேற்று கோத்தா பாருவில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் பேசிய அக்கட்சயின் தலைவருமான அன்வாத் இப்ராஹிம், கட்சி அமைப்பு ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு, வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
"பொதுத் தேர்தலுக்கு நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். அற்பமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதையும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்க மறுப்பதையும் விடுத்து, நாம் வேலை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
பதவிக்காகப் பிரச்சாரம் செய்யும்போது மட்டுமே உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற பிறகு தங்கள் கடமைகளைச் செய்வதிலோ அல்லது கூட்டங்களில் கலந்துகொள்வதிலோ மெத்தனமாகிவிடுவதையும் அன்வர் விமர்சித்தார்.
"யாராவது சோர்வாக உணர்ந்தால், என்னிடம் தெரிவியுங்கள். விடுப்பு கேளுங்கள். இந்தக் கட்சி மக்களுக்கும், அவர்களுக்காக உழைக்கவும் போராடவும் விரும்புபவர்களுக்கும் சொந்தமானது" என்று அவர் கூறினார்.
கிளைகளின் செயல்திறனின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும், சுறுசுறுப்பான மற்றும் வளர்ந்து வரும் உறுப்பினர்களைக் கொண்ட கிளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அன்வர் கூறினார்.
உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்காத அல்லது செயல்பாடுகளை மேற்கொள்ளாத கிளைகளுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



