வள்ளுவரை வைத்து சர்ச்சையை உருவாக்காதீர்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், டிச 6: நாட்டில் தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்காதீர்கள் என்று மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிள்ளான், தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் ஜொகூரில் ஒரு பள்ளியில் திருவள்ளுவர் சிலையை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தவறான தகவல்களை சர்ச்சையாக்கி செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

அந்தப் பள்ளியில் இரு வேறு குழுக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் ஏற்பட்ட விளைவு அது. இதற்கும் மாவட்ட கல்வி இலாகாவுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

உண்மையில் நம் பிரதமர் பட்ஜெட் நேரத்தில் கூட திருக்குறளை வாசித்துதான் தொடங்குவார். அந்த அளவுக்கு உலகப் பொதுமறையான திருக்குறளை நேசிப்பவர். அதேபோல் நமது பிரதமர் இந்தியா சென்ற போது இந்திய பிரதமர் மோடி திருவள்ளுவருக்கான ஓர் இருக்கை மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அந்த வேண்டுகோளுக்கிணங்க அண்மையில்தான் திருவள்ளுவருக்கான ஓர் இருக்கை மலாயாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு, அதற்கான சிறப்புப் பேராசிரியர் கூட இந்திய அரசால் நியமிக்கப்பட்டு, தற்போது பணியைத் தொடங்கியுள்ளார். எனவே வள்ளுவரை உலகமே கொண்டாடுகிறது. ஆனால், அவர் பெயரை வைத்து நம்மில் சிலர்தான் போலித்தனம் காட்டுகிறோம் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *