அன்வார் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு! - ஜாஹிட்
- Shan Siva
- 13 Nov, 2026
கோலாலம்பூர், நவ 13: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்துக்கு பாரிசான் நேஷனல் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மெலாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அளவில் அம்னோவும் பக்கத்தான் ஹராப்பானும் வெவ்வேறு அரசியல் பாதைகளில் பயணித்தாலும், மத்திய அரசாங்கத்தில் தங்களுடைய ஒத்துழைப்பு தொடரும் என்று கூறியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படவில்லை என்றும், பிரதமருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
டிஏபி தலைவர் கோபிந்த் சிங் தேவ், அன்வார் மீது நம்பிக்கை இல்லையென்றால் ஜாஹிட் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார். இதற்குப் பதிலளித்த ஜாஹிட், டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் செய்ததைப் போலவே கோபிந்தும் தனது கட்சியின் நிலைப்பாட்டைச் செயல்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

