நஜிப்பை தொடர்ந்து தற்காப்பது அம்னோவை முடக்கி விடும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 4 -

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை "காப்பாற்ற" முயல்வதும் அவரைத் தொடர்ந்து தற்காக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதும், அரசியல் ஆதிக்கத்திற்குத் திரும்பும் அம்னோவின் முயற்சியை பாதிக்கச் செய்து விடும் என்று, அரசியல் ஆய்வாளர் கூறுகிறார்.

நஜிப்புக்குப் பாதுகாப்பு கொடுப்பதை நிறுத்த மறுப்பதே அம்னோ புரிந்து வரும் மிகப் பெரிய தவறு என்று, மலேசிய இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் ஷாஸா சுக்ரி தெரிவித்துள்ளார். "இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். நஜிப் ஒரு குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தை அவர்கள் நீதித் துறையிடமே விட்டுவிட வேண்டும்.

"நஜிப்பை அப்பாவியாக சித்தரிப்பதையும் அவரை "பாதுகாக்க' முயல்வதும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது " என்று  ஷாஸா கூறினார்.1எம்டிபி விவகாரத்தைக் கையாள்வதில் ஏற்பட்டுள்ள கட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்ததால், அம்னோ "நஜிப்பின் உதவியுடன் முன்னேறுவதை தடுத்து, பக்காத்தான் ஹராப்பானுடன் "முட்கள் நிறைந்த" ஓர் உறவுக்கு வழிவகுத்தது என்று, அம்னோவின் முன்னாள் உறுப்பினர் ஷாரில் ஹம்டான் முன்பு கூறியிருந்ததாகக் கூறப்பட்டது.

அரசியல் ஆதிக்கத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டுமென்றால், அம்னோ உட்பட மேலும் சில கட்சிகளை உள்ளடக்கி இருக்கும் தேசிய முன்னணி, "நான்கு நோய்களிலிருந்து" தன்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கூட்டரசு பிரதேச தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கனியும் கூறியிருந்தார்."செயலற்ற தன்மை, மாயை, மறதி மற்றும் ஆணவம் ஆகியவையே அந்த நான்கு நோய்கள் என்று, கடந்த நவம்பர் 24ஆம் தேதி நடந்த கூட்டரசு பிரதேச தேசிய முன்னணி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜொஹாரி இதனை தெரிவித்திருந்தார்.

மலேசியர்கள் தொடர்ந்து தங்களை ஆதரிப்பதற்குப் போதுமானவற்றை, தேசிய முன்னணி கடந்த காலங்களில் நிறைவாக செய்து விட்டது என்ற மாயையில், பல தேசிய முன்னணி,தலைவர்களும் உறுப்பினர்களும் மெத்தனப் போக்குடன் வேளி செய்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மலேசியாவை மேம்படுத்துவது மற்றும் மக்களுக்கான முன்னேற்றத்தை கொண்டு வரும் தனது வழியையும் முக்கியம் போராட்டங்களையும்கூட அவர்கள் மறந்துவிட்டதாக ஜொஹாரி கூறியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *