வியழக்கிழமை வரை பல மாநிலங்களில் தொடர் மழை! - மெட் மலேசியா அறிக்கை
- Shan Siva
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச 15: வரும் வியாழன் வரை பல மாநிலங்களில் தொடர்ந்து
கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை
விடுத்துள்ளது.
கிளந்தான் மற்றும் திரெங்கானுவில்
கடுமையான தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஓர் அறிக்கையில்,
மெட்மலேசியாவின் இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.
பஹாங்கின் குவாந்தன்,
பெக்கான் மற்றும் ரொம்பின் பகுதிகளுக்கும்,
ஜொகூரில் உள்ள மெர்சிங் மற்றும் கோத்தா டிங்கி
ஆகிய பகுதிகளுக்கும் இதே அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேராக் (உலு பேராக் மற்றும் கோல கங்சார்),
பகாங் (கேமரன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ஜெரான்டுட், தெமர்லோ, மாரான் மற்றும் பெரா) ஜொகூர் (செகாமட், குளுவாங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜொகூர் பாரு) ஆகிய இடங்களுக்கு
இதே காலப்பகுதியில் தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரவாக்கில் உள்ள கூச்சிங்,
செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பீடோங், சரிகேய், சிபு மற்றும் முக்கா
உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வரை எச்சரிக்கை அளவிலான தொடர் மழை எச்சரிக்கை அமலில்
இருக்கும் என்று டாக்டர் முகமட் ஹிஷாம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



