சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம்: Selangor மாநில அரசு, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்கும் சிறப்பு ஹரி ராயா ஐடில்ஃபித்ரி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், மார்ச் 19ஆம் தேதி முதல் தொகை வரவுசெய்யப்படும் என்றும் மாநில முதல்வர் Amirudin Shari கூறினார்.

சம்பளங்கள் மார்ச் 13 முதல் 16 வரை வழங்கப்படும். ஆகையால் முன்கூட்டியே செலவழிப்பது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஊக்கத்தொகை மார்ச் 19ஆம் தேதி வரவாகும் என்று அவர் மாநில அரசு ஊழியர்களுடன் நடைபெற்ற ‘அக்ராப் மஹப்பா இன்சானி ரமலான்’ நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும், கிராம சமூக மேலாண்மை கவுன்சில் உறுப்பினர்கள், புதிய கிராம/பாகான் இணைப்பாளர் அதிகாரிகள், இந்திய சமூகத் தலைவர்கள், வனிதா பெர்தயா மேற்பார்வையாளர்கள் மற்றும் Penggerak Belia Selangor உறுப்பினர்கள் ஆகிய சமூகத் தலைவர்களுக்கு ஒரு மாத கொடுப்பனவு அல்லது குறைந்தபட்சம் RM500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பள்ளிவாசல் பணியாளர்கள் மற்றும் ‘குரு ராக்யாத்’ (சமூக மத ஆசிரியர்கள்) ஆகியோருக்கும் RM500 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறினார்.

இவ்வருடம், RM3,000 மற்றும் அதற்கு குறைவான சம்பளம் பெறும் நிரந்தரப் பணியிலுள்ள கூட்டரசு அரசு ஊழியர்கள் 50,000 பேருக்கும் — காவல்துறை, இராணுவம், தீயணைப்பு வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட — RM300 வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தத்தில் ‘கிதா சிலாங்கோர் ஐடில்ஃபித்ரி சிறப்பு ஊக்கத்தொகை’ திட்டத்திற்காக RM66.25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 19, வியாழக்கிழமை முதல் தொகை வழங்கப்படும் என்றார்.

இதற்கிடையில், Pertubuhan Wartawan Jurugambar Selangor (WAJAR) அமைப்பில் பிப்ரவரி 27ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள ஊடகத்துறைப் பணியாளர்களுக்கு RM1,000 சிறப்பு நிதி ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அமிருடின் ஷாரி அறிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *