மலேசியா - இந்தியா 30 நாள் விசா இல்லாத வசதியைப் பயன்படுத்தி வேலை தேடுவதா? இந்திய தூதரகம் எச்சரிக்கை
- Shan Siva
- 22 Sep, 2026
கோலாலம்பூர், செப் 22: மலேசியாவின் 30 நாள் விசா இல்லா வசதியைப் பயன்படுத்தி வேலை தேடுவதற்கு
எதிராக கோலாலம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையம் இந்தியக் குடிமக்களை
எச்சரித்துள்ளது.
போலி வேலை
வாய்ப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் வருகை
குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் தனது
அதிகாரப்பூர்வ X கணக்கில்
வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், இந்திய
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்க அனுமதிக்கும் இந்த விசா இல்லா வசதியானது,
சுற்றுலா மற்றும் சமூக வருகைகளுக்கு
மட்டுமேயானது கூறியுள்ளது.
வேலை தேடுவதற்கு
இந்த வசதியைப் பயன்படுத்துவது குடிநுழைவு விதிகளின் தெளிவான மீறலாக இருக்கும்
என்றும் வதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை தேடுவதற்காக
30 நாள் விசா இல்லா
வசதியைப் பயன்படுத்தி மலேசியாவிற்கு வரும் இந்தியக் குடிமக்களின் எண்ணிக்கை
குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



