‘ஆப் கிராக்’ நடவடிக்கை: மேலும் 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 4-

 மலேசிய குடிநுழைவு துறையின் (Immigresen) கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி, தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதி (PLKS) விண்ணப்பங்கள் மற்றும் ஒப்புதல்களில் முறைகேடு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் வழக்கில், மேலும் ஐந்து குடிநுழைவு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) கைது செய்துள்ளது.

30 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அதிகாரி, நேற்று எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை, ‘ஆப் கிராக்’ (Op Crack) என்ற சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த புதிய கைதுகளுடன், இதுவரை கைது செய்யப்பட்ட குடிநுழைவு துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மலேசிய குடிநுழைவு துறையின் MyIMMs எனப்படும் கணினி அமைப்பு சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டு, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான PLKS அனுமதிகளை முறைகேடாக வழங்க சதித்திட்டம் நடைபெற்றதாக விசாரணையில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று காலை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கக் காவலுக்கு விண்ணப்பிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *