ஏ.ஐ. மனிதகுலத்துக்கு ஆபத்தாக மாறலாம் – ஐ.நா.வில் ஆந்த்ரோபிக் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சரியாக கையாளப்படாவிட்டால், அது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஆபத்தாக மாறக்கூடும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் எச்சரித்துள்ளார்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் ஏ.ஐ. ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அவர் பேசினார்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது மற்றும் அதன் திறன் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளர்வது ஆகியவை முக்கிய ஆபத்துகள் என அமோடெய் குறிப்பிட்டார். குறிப்பாக உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவது போன்ற அபாயகரமான செயல்களுக்கு ஏ.ஐ. பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *