சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் முகாம்கள்? ஒருங்கிணைந்த சோதனையில் அதிர்ச்சி தகவல்
- Surendran Sumdraraj
- 12 Jun, 2026
சபாக் பெர்ணாம், ஜூன் 12 –
சிலாங்கூர் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள், குறிப்பாக சபாக் பெர்ணாம் கடற்பரப்பு, சட்டவிரோத குடியேற்றவாசிகள் (PATI) நாட்டிற்குள் நுழையும் வழித்தடமாக மட்டுமல்லாமல், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
சிலாங்கூர் தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) ஒருங்கிணைப்பில், மலேசிய அரச போலீஸ் (PDRM), மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (Maritim Malaysia), குடிநுழைவுத் துறை மற்றும் பல்வேறு அமலாக்க அமைப்புகள் இணைந்து நேற்று இந்த விரிவான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.
சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் துணை கமிஷனர் முகமது ஜைனி அபு ஹசான் கூறுகையில், இந்த நடவடிக்கையில் கடல் மற்றும் தரை வழி சோதனைகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்த இந்த சிறப்பு நடவடிக்கையில் சுமார் 250 அதிகாரிகளும் அமலாக்கப் பணியாளர்களும் பங்கேற்றனர். கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதுடன், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற ஒருங்கிணைந்த சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



