சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு; பட்டமளிப்பு விழாவில் உரையைப் புறக்கணித்து வெளியேறிய மாணவர்கள்
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
கலிபோர்னியா, ஜூன் 16 –
கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பங்கேற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, சுந்தர் பிச்சை மேடையில் உரையாற்றத் தொடங்கியபோது 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து, பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களை எழுப்பியபடி அரங்கிலிருந்து வெளியேறினர். சிலர் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியதுடன், பதாகைகளையும் காட்சிப்படுத்தினர்.
கூகுள் நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் நிம்பஸ்’ உள்ளிட்ட இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போராட்டத்திற்கான திட்டமிடல் விழாவுக்கு முன்பே மாணவர் அமைப்புகளால் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
போராட்டம் நடைபெற்றபோதும், சுந்தர் பிச்சை தனது உரையை இடைநிறுத்தாமல் தொடர்ந்து நிகழ்த்தினார். தனது உரையில் அவர் நம்பிக்கை, வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



