எதிர்க்கட்சி வசமுள்ள மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பிரச்சினையில்லை - அன்வார்!

- Muthu Kumar
- 24 Nov, 2024
கோலாலம்பூர், நவ.24-
எதிர்க்கட்சிகளினால் நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில், மத்திய அரசாங்கத்திற்கு அரசியல் வேறுபாடுகள் தடையாக இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களிடமிருந்து இதுவரையில் தாம் சாதகமான ஒத்துழைப்பைப் பெற்றிருப்பதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
"அரசாங்க விவகாரங்கள் கூட்டாகக் கையாளப்பட வேண்டும் என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து மாநில மந்திரி பெசார்களுடனான கலந்துரையாடல்களில் நான் வலியுறுத்திக் கூறியுள்ளேன்."மாநில அரசாங்கங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நமக்கிடையிலான அரசியல் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இது வரையில் நான் மிகப் பெரிய பிணக்குகளை எதிர்நோக்கியதில்லை" என்று, கேஎல்சிசியில் நேற்று நடந்த ஒற்றுமை அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தில் பேசும்போது, பக்காத்தான் ஹராப்பான் தலைவருமானஅன்வார் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சித் தலைமையிலான மாநிலங்களுக்கும் இடையில் ஆண்டுகளைக் காட்டிலும் கருத்துவேறுபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட அன்வார், இம்மாநிலங்களுக்கான மேம்பாட்டு நிதி மத்திய அரசாங்கத்தினால் வசூலிக்கப்படும் ராயல்டியையும் மிஞ்சிவிட்டதை சுட்டிக் காட்டினார். எனினும், அரசியல் கலக்கப்பட்டிருப்பதன் காரணத்தினால், இந்த மேம்பாட்டு நிதி அவ்வப்போது அடிமட்ட மக்களை சென்றடைவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
பெர்லிஸ், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், முந்தைய இவ்வாண்டில் கணிசமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அனைத்தையும் ஒன்று சேர்த்தால், வசூலிக்கப்பட்ட மொத்த ராயல்டி தொகையையும் அது மிஞ்சிவிட்டது” என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
"அனைத்து மாநிலங்களிலும் ஏழ்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் விவகாரங்கள் மீது மத்திய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பொதுமக்கள் நலன்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருந்தால் மத்திய அரசாங்கம் உடனடியாக மானியங்களை அங்கீகரிக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *