மலேசியாவில் உலகக் கோப்பை சூதாட்டம்! 58 பேர் கைது!
- THINAGAREN SANGGAREN
- 19 Jun, 2026
ஜூன் 19,
FIFA உலகக் கோப்பை காற்பந்தாட்டத்தின் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK M.KUMAR தெரிவித்தார். கடந்த ஜுன் 11 முதல் ஜூலை 18 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் Op Soga சோதனையை மேற்கொண்டதாகவும் பல்வேறு வணிகக் கடைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ONLINE சூதாட்டத்தின் மூலமாக FIFA உலகக் கோப்பை காற்பந்தாட்டத்தின் சூதாட்டத்தை நடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 54 ஆண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK M.KUMAR தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையின் மூலமாக RM25,684.65 ரொக்கப் பணமும், RM488,582.47 மதிப்பிலானப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக DATUK M.KUMAR தெரிவித்தார். இதுவரையில் சமூக ஊடகங்களில் செயல்பட்டு வந்த 42 வலைத்தளங்களை முடக்கியிருப்பதாகவும் மேலும் பல்வேறு வலைத்தளங்கள் சூதாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை கண்டறிந்துள்ளதாக DATUK M.KUMAR தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



