RM 9 லட்சத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்! KL காவல்துறை அதிரடி!
- Shan Siva
- 12 Jan, 2026
கோலாலம்பூர்: இந்த மாத
தொடக்கத்தில் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் போதைப்பொருள் விநியோக
கும்பலை போலீசார் முறியடித்து RM978,857 மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
ஜாலான் கூச்சிங்கில் உள்ள
ஒரு காண்டோமினியம் வாகன நிறுத்துமிடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி போலீசார் ஒரு வாகனத்தை தொடர்ந்து சென்ற பின்னர்,
29 வயதான உள்ளூர் நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
வாகன சோதனையில்
போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒரு வீட்டைத் தொடர்ந்து சோதனை
செய்ததாகவும் ஃபாடில் கூறினார்.
சந்தேக நபர் ஒரு முகவராகச்
செயல்பட்டு, தனது வாகனத்தில் பல்வேறு
வகையான போதைப்பொருட்களை எடுத்துச் சென்று, வீட்டை சேமிப்பு மற்றும் செயலாக்க இடமாகப் பயன்படுத்தினார் வ்என்று அவர் இன்று
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
திரவ மற்றும் தூள்
எக்ஸ்டசி, கெத்தமைன், கஞ்சா மற்றும் எரிமின் 5 மாத்திரைகள் உட்பட RM832,350 மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக
ஃபாடில் கூறினார்.
கைப்பற்றப்பட்ட மருந்துகள் 3,768 பேர் உபயோகிக்ககூடிய அளவு என்றும், சிண்டிகேட்டின் மற்ற உறுப்பினர்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஃபாடில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



