நகைச்சுவைக் கலைஞரின் மகளுக்கு மிரட்டல்; தொழிலாளிக்கு 5 மாதங்கள் சிறை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 1-

நாட்டின் முன்னணி நகைச்சுவைக் கலைஞர் ஹரித் இஸ்கண்டரின் மகளுக்கு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்ட இஸூ டின் சலீம் (வயது 31) எனும் தொழிலாளிக்கு மாஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனையும் ஈராயிரம் வெள்ளி அபராதமும் விதித்தார்.

ஹரித்தின் முன்னாள் மனைவி டாக்டர் ஜெஸ்மின் லிம் என்பவரின் வாட்ஸ்அப் தளத்திற்கு அந்த மிரட்டல் செய்தியை இஸூடின் அனுப்பி வைத்துள்ளார்.
அச்செய்தியுடன் ஹரித்துடைய மகளின் படத்தையும் அவன் இணைத்திருந்தான். நான் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன். உங்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், மகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்த மிரட்டல் செய்தியில் இஸ்டின் குறிப்பிட்டார்.

இம்மாதம் 23ஆம் தேதியன்று அச்செய்தி அனுப்பட்டிருந்தது.தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு தன்னுடைய செய்கைக்காக மனம் வருந்துவதாக இஸூ டின் கூறினான்.நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஹரித் குறிப்பிட்டார். ஜெஸ்மின் லிம்மும் நேற்று நீதிமன்றம் வந்திருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *