இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு! லாபுவான் விமான நிலையத்தில் பரபரப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 27: ஓடுபாதையிலிருந்து 150 மீட்டர் தொலைவில் இரண்டாம் உலகப் போர்க் காலத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை லபுவானில் இருந்து புறப்படும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போர்க் காலத்து வெடிகுண்டுகள் என நம்பப்படும் இந்த வெடிபொருட்கள், கெருபாங் கடலோரச் சாலையில் உள்ள ஒரு சரிவு சீரமைப்புத் திட்டப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பகமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

விசாரணைகள் நடைபெற்று வருவதால், ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது  விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மலேசியா ஏர்போர்ட்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 இந்த மூடல் காரணமாக, லபுவானில் இருந்து மீரி மற்றும் கோத்த கினபாலு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும், லாபுவானில் இருந்து வரும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *