வீலிங் சாகசம் செய்த 3-ஆம் படிவ மாணவர் மரணம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 8: திரெங்கானு செத்தியூவில் உள்ள சுங்கை டோங்கில், நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 3ஆம் படிவ மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

15 வயதான அந்த மாணவர் தனது மோட்டார் சைக்கிளை ஆபத்தான முறையில் ஓட்டி, இந்த சாகசத்தைச் செய்த பின்னர், மாலை சுமார் 6.45 மணியளவில் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் கீழே விழுந்தார் என்று செத்தியு காவல் நிலையத் தலைவர் ஜெய்ன் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

அதே திசையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அவரைத் தவிர்க்க முடியாமல், பாதிக்கப்பட்டவர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சுங்கை டோங் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் ஜெயின் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *