முன்னாள் இராணுவத் தலைவர் & அவரின் இரு மனைவிகள் கைது!
- Shan Siva
- 08 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 8:
இராணுவ கொள்முதல் டெண்டர் திட்டம் தொடர்பான விசாரணையில், முன்னாள் இராணுவத் தலைவர் ஹஃபிஸுதீன் ஜந்தான் மற்றும் அவரது
இரு மனைவிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,
இராணுவத் தலைவர் பதவி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில் அஸ்ஹான்
ஒஸ்மானுக்கு வழங்கப்பட்டது.
மூத்த இராணுவ
அதிகாரி ஒருவரின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில்
“பெரும் அளவிலான பணப் பரிவர்த்தனைகள்” இடம்பெற்றதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளின் பின்னணியில், ஹஃபிஸுதீன்
ஜந்தான் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இதற்கிடையில்,
2023 ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ந்து அதிக மதிப்புள்ள இராணுவ ஒப்பந்தங்களை பெற்றதாக கூறப்படும் 26 நிறுவனங்களின் உரிமையாளர்களையும் MACC விசாரித்து வருகிறது.
மேலும் நேற்று
வழங்கல் மற்றும் பராமரிப்பு திட்டங்களைப் பெறுவதற்காக மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு
லஞ்சம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 17 நிறுவன இயக்குநர்களை ஐந்து நாட்கள் remand-இல் வைக்க MACC நீதிமன்ற அனுமதி பெற்றது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



