முன்னாள் மூத்த அரசு ஊழியர்களும் எங்களுக்கு ஆதரவு! - ரஃபிஸி ரம்லி
- Shan Siva
- 21 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 21: வரவிருக்கும் ஜொகூர்
மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் மலேசிய பெர்சமா கட்சியின் வேட்பாளர்களாகப்
போட்டியிட முன்வந்தவர்களில் முன்னாள் மூத்த அரசு ஊழியர்களும் அடங்குவர் என
அக்கட்சியின் தலைவர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மற்றும் நெகிரி
செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து ஒரு வாரத்திற்கு
முன்பு விண்ணப்பங்கள் திறக்கப்பட்ட நிலையில், கட்சிக்கு ஊக்கமளிக்கும்
வரவேற்பு கிடைத்துள்ளதாக ரஃபிஸி கூறினார்.
வேட்பாளர்களில்
தொழில் வல்லுநர்கள், அரசியல் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் சமூகப்
பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்கள் எனப் பலதரப்பட்டோர் உள்ளனர் என்று முன்னாள்
பொருளாதார அமைச்சருமான அவர் கூறினார்.
ஒவ்வொரு
விண்ணப்பத்தையும் தாம் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், தொழில் வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும்
முன்னாள் மூத்த அரசு அதிகாரிகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக
உள்ளது என்றும் அவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களின்
கல்விப் பின்னணி, தொழில்முறை சாதனைகள், சமூக ஈடுபாடு மற்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை தாங்கள்
கருத்தில் கொள்கிறோம் என்று நேற்று இரவு கோத்தா பாருவில் நடைபெற்ற கட்சியின்
மக்கள் பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஜொகூர் தேர்தலுக்கான தனது
வேட்பாளர் பட்டியலை பெர்சமா கட்சி வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்றும் அவர்
தெரிவித்தார். கட்சி போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அவர்
வெளியிடவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



