சரவணன் மீதான ஊழல் வழக்கு... விசாரணை தேதி ஒத்தி வைப்பு!
- Shan Siva
- 29 Sep, 2026
கோலாலம்பூர், செப் 29: மனிதவளத்துறை முன்னாள் அமைச்சர் எம். சரவணன்
மீதான ஊழல் வழக்கு விசாரணையைத் தொடங்க அவர் தயாராக உள்ளதாகவும், ஆனால், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க அரசுத் தரப்பு கூடுதல் அவகாசம்
கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்
கூட்டத்தின் குறிப்புகள் உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், விசாரணை தேதியை இறுதி செய்யவும் அரசுத் தரப்பு
வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரியதாக சரவணனின்
வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் தெரிவித்தார்.
இரு தரப்பு
வாதங்களையும் கேட்டறிந்த அமர்வு நீதிமன்றம், தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் விசாரணை தேதியை
இறுதி செய்யவும் நவம்பர் 3-ஆம் தேதியை
நிர்ணயித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



